Sunday, November 13, 2011

சில்லி சிக்கன்

search
சில்லி சிக்கன்,chillichickenதேவையான பொருள்கள்




சிக்கன் - 500 கிராம்

மிளகாய் அரைத்தது - ஒரு டிஸ்பூன்
வினிகர் - ஒரு டிஸ்பூன்
பூண்டு தோல் உரித்தது - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு


செய்முறை


கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்து வைத்த கோழி இறைச்சித் துண்டுகளைப் போட்டு அவற்றுடன் மிளகாய் விழுது உப்புத்தூள் வினிகர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.


பச்சை மிளகாய் பூண்டு இரண்டையும் சேர்த்து மை போல அரைத்து கோழி இறைச்சி கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அரைமணி நேரம் ஊரவைக்கவும்.

வானலியில் எண்ணெய் வி்ட்டு காய வைக்கவும் எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மிளகாய் கலவையுடன் ஊரவைத்திருக்கும் கோழிக்கறியை போட்டு நன்றாக கிளரவும்

அடுப்புத் தீயை குறைவாக எரிய விட்டு வானலியை மூடி வைக்கவும் கோழி இறைச்சித் துண்டுகள் வெந்ததும் திறந்து கிழறி விடவும் கலவையுடன் சேர்த்து நன்றாக வெந்து சுருண்டு வரும்போது இறக்கவும்.
பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்


No comments:

Post a Comment