Sunday, November 13, 2011

பிஸி பேளே பாத்

search
பிஸி பேளே பாத்,


தேவையான பொருள்கள்


அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
பச்சை க. பருப்பு -21/2தே.கரண்டி
உளுத்தம் பருப்பு -1 தே. கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2 - 3
மல்லி - 2 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் - 6 - 8
எண்ணெய் - 2 தே.கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
தேங்காய் துருவல் -3/4தே.கரண்டி
புளி -எலுமிச்சை அளவு
கடுகு -3/4தே\.கரண்டி
உளுத்தம் பருப்பு -1/4 தே.கரண்டி
பீன்ஸ் - 1/2 கி.
உருளைக்கிழங்கு - 2
உப்பு - 3 தே.கரண்டி

மசாலாப் பொடி:

பச்சைக் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.
தேங்காய்த் துருவலுடன் இவற்றையும் சேர்த்து அரைத்தெடுக்கவும்.


செய்முறை


துவரம் பருப்பை, வேண்டிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்தவுடன் காய்கறிகளையும், பாதியளவு மசாலாவும், உப்பு, கரைத்த புளிநீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
காய்கள் பாதி வெந்தவுடன் அரிசியையும் சேர்த்து, வேக வைக்கவும்.


மசாலாவையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் ஆனவுடன் கடுகு சேர்த்துத் தாளித்தெடுக்கவும்.


No comments:

Post a Comment